சந்தானத்தின் பிறந்த நாளன்று வெளியான டிக்கிலோனா படத்தின் ஸ்டைலான கெட்அப்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'A1'   படத்துக்கு பிறகு  சந்தானத்தின் டகால்டி, சர்வர் சுந்தம் ஆகிய படங்கள் ஜனவரி 31ம் தேதி திரைக்கு வர உள்ளன.

Santhanam, Dikkiloona new look revealed in Birthday celebration with Yogi Babu

இதைத்தொடர்ந்து அவர் ஜான்சன் இயக்கும் பெயர் சூட்டப்படாத ஒரு படத்திலும், புதுமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் ‘டிக்கிலோனா’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் அவருடன் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இன்று சந்தானத்தின் பிறந்தநாள் என்பதால் டிக்கிலோனா படக்குழுவினரோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடினார். இதில் அவருடன் நடிகர் யோகிபாபு மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

சந்தானம் ஏ1 திரைப்படத்துக்கு பிறகு சர்வர் சுந்தரம், டகால்டி, மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும், டிக்கிலோனா, இயக்குநர் கார்த்திக் யோகி மற்றும் ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் ஒரு திரைப்படம், மேலும் ஜெயம் கொண்டான் படத்தை இயக்கிய கண்ணனின் இயக்கத்தில் ஒரு படம் என்று ஏராளமான வாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார்.

Entertainment sub editor