தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ ஆடியோ லாஞ்ச் பற்றி பிரபல இயக்குநர் சொன்ன குதர்க்கமான தகவல்!
முகப்பு > சினிமா செய்திகள்பிகிலைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். விஜய்யுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரீயா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

ஆனால், வருமானவரித்துறை விஜய்க்கு அனுப்பியுள்ள சம்மன் காரணமாக நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வந்த மாஸ்டர் ஷூட் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மாஸ்டர் கதாசிரியர்களில் ஒருவரும், ஆடை படத்தின் இயக்குநருமான ரத்னகுமார் டிவிட்டரில், வெய்ட்டிங் ஃபார் மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் என்று பதிவிட்டுள்ளார். இது, மாஸ்டர் படத்தில் இருந்து வரவுள்ள ஆடியோ லாஞ்ச் அப்டேட் குறித்த குதர்க்கமான தகவலாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கணிக்கின்றனர்.
Waiting for #Master Audio Launch🔥🔥🔥🤫
— Rathna kumar (@MrRathna) February 6, 2020