Breaking: இந்த ஹீரோ படத்தின் மூலம் தயாரிப்பாளராகும் நடிகர் சூரியின் மேனேஜர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 06, 2019 03:43 PM
நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'A1' திரைப்படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்றது.

இதையடுத்து சந்தானம் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த திரைப்படத்தை மீண்டும் இயக்குநர் ஜான்சன் இயக்கவிருக்கிறார். இந்த படத்தை காமெடி நடிகர் சூரியின் மேனேஜரான குமார் தயாரிக்கிறார்.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக குமார் அறிமுகமாகவுள்ளதாக நமக்க தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்ட்டி’, ‘சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’, இயக்குநர் ஆர்.கண்ணனின் பெயரிடப்படாத திரைப்படம் என பல படங்கள் கைவசம் உள்ளன.
Tags : Soori, Santhanam, A1, Soori Manager Kumar