சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' படத்திலிருந்து முக்கிய அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 18, 2019 01:28 PM
'பேட்ட' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் தனது டப்பிங் பேசத் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.
அந்த பதிவில் ரஜினிகாந்துடன் பேசிக்கொண்டிருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ள அவர், என் வாழ்வில், சிறந்த டப்பிங் நாட்களில் ஒன்று தலைவரின் 'தர்பார்' டப்பிங் பணிகள் முடிவடைந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
'தர்பார்' படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.