ஆல்யா மானஸாவுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்த சஞ்சீவ் - ''விரைவில் குட் நியூஸ்''
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்றவர்கள் சஞ்சீவ் கார்த்திக் - ஆல்யா மானஸா ஜோடி. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென ஆல்யாவை திருமணம் செய்து கொண்டதாக சஞ்சீவ் அறிவித்தார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆல்யாவிற்கு சமீபத்தில் வெகு விமர்சையாக வளைகாப்பு நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இருவருக்கும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் ஆல்யா மானஸா குறித்து அவ்வப்போது அப்டேட்களை சஞ்சீவ் வழங்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆல்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த சஞ்சீவ், எல்லோருக்கும் வணக்கம். விரைவில் குட் நியூஸ் என்று தெரிவித்துள்ளார்.
Tags : Alya Manasa, Sanjeev Karthick