மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட ஆல்யா - பெயர் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட அவர், தனது குழந்தைக்கு அய்லா செய்யத் (Aila Syed) என்று பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Alya Manasa shared her daughters name on instagram | ஆல்யா மானஸா தனது குழந்தையின் பெயரை அறிவித்தார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடர் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் - ஆல்யா மானஸா ஜோடி. இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தாங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளதாக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அதிரடியாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கர்ப்பமாக இருந்த ஆல்யாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து இத்தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ள ஆல்யா தனது குழந்தைக்கு அய்லா செய்யத் என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Entertainment sub editor