இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'மெட்ராஸ்' படத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ரித்விகா. இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு அந்த சீசனில் தனது அசாத்திய திறமையால் டைட்டில் வின்னரானார்.

சமீபத்தில் பா.இரஞ்சித் தயாரிப்பில் அவர் நடித்திருந்த 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக்குண்டு' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதனையடுத்து அவரது நடிப்பில் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்', சிபி சத்யராஜின் 'வால்டர்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருப்பு வெள்ளை மற்றும் கலர் புகைப்படத்தை பகிர்ந்த அவர், ''இதுவரை எதுவும் மாறலனா, எதுவும் மாறாது. நம் மனநிலை மாறினால் தான் எல்லாம் மாறும்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ரசிகர் ''பட வாய்ப்பு இல்லாமல் வெட்டியா இருக்காங்க'' என்ற கமெண்ட் செய்ய, மூடிட்டு போடா'' என்று அந்த கமெண்டிற்கு பதிலளித்துள்ளார்.