'அதிர்ச்சியாகவும் மன அழுத்தமாகவும்' உள்ளது.... மீளா துயரத்தில் நடிகர் சந்தானம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாக்டர் சேது மரண செய்தி கேட்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். டாக்டராக சேவை செய்வது மட்டுமல்லாமல், அநேகருக்கு யூடியூப் சேனல் ழூலம் டிப்ஸ்களும் வழங்கி வந்தார்.

நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்| sanhtanam shocked and depressed for sethu death

டாக்டர் சேதுவும், நடிகர் சந்தானமும் நெருங்கிய நண்பர்கள் என்பது திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு முழு நேர தனது டாக்டர் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவரது திடீர் மரணம் திரையுலகம் மட்டுமின்றி நண்பர் சந்தானத்தையும் அதிகமாக பாதித்துள்ளது. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில்“முற்றிலுமாக உறைந்து போய்விட்டேன்... மிகவும் அதிர்ச்சியாகவும் மனஅழுத்தமாகவும் உள்ளது. எனது நண்பன் சேதுவின் ஆத்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor