#SHOCKING - கண்ணா லட்டு தின்ன ஆசையா பட புகழ் டாக்டர் சேதுராமன் காலமானார்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகரும் மருத்துவருமான சேதுராமன் இன்று காலமானதாக தகவல் தெரிய வந்துள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானவர் சேதுராமன். இவர் மருத்துவராக பணியாற்றி வருபவர். இத்திரைப்படத்தில் இவருடன் சந்தானம், பவர் ஸ்டார் ஶ்ரீநிவாசன் உள்ளிட்டோர் நடித்தனர். நகைச்சுவை கலந்த இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் முழுநேர மருத்துவ பணியில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் இன்று காலமாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்னர் இவர், ஹார்ட் அட்டாக் காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.தோல் மருத்துவத்தில் நிபுணரான இவர், Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார். இவரின் இந்த திடீர் மறைவு திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sad news. Actor and Doctor Sedhuraman passed away few hours ago due to cardiac arrest. My condolences to his family. RIP pic.twitter.com/SIlkfQ1qm2
— Sathish (@actorsathish) March 26, 2020