“திரும்பவும் நடிக்கலாமா? ஆனா....” - Friends-இடம் அட்வைஸ் கேட்டு குஷ்பு எடுத்த அதிரடி முடிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை குஷ்பு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கலமா என ட்விட்டரில் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுத்துள்ளார்.

Don't want to be lost in crowd, Khushbu asks she should take up movies again

சினிமா, டிவி, தயாரிப்புப் பணிகள், அரசியல், குடும்பம் என இன்னமும் பரபரப்பான குஷ்புவாக, வருஷம் 16 குஷ்புவாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகால தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஐகானாக திகழும் நடிகை குஷ்பு தற்போது சீரியல் மற்றும் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக இருக்கிறார்.

இதனிடையே, தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நடிகை குஷ்பு, மீண்டும் சினிமாவில் நடிப்பை தொடரலாமா என்ற கேள்வியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நண்பர்களின் ஆலோசனையை கோரியுள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘திரும்பவும் நடிக்கலாமா..? ஆனா கூட்டத்துல காணாமபோக விரும்பல..வெறும் சுவாரஸ்யமான கேரக்டர்களில் மட்டுமே நடிக்க விருப்பம். இப்போது என்னிடம் அதிக நேரம் இருக்கிறது.. அதனால நடிக்கலாமா?’ என கேள்வி கேட்டுள்ளார்.

‘திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிப்பை தொடரலாமா? உங்களது அறிவுரை தேவை’ எனவும் குஷ்பு பகிர்ந்துள்ளார்.

இதற்கு வந்த பதில்களை அடுத்து, ‘உங்களது பதில்களால் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தேன். நீங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. இனி ஸ்க்ரிப்ட் கேட்க தொடங்குகிறேன். முன்பு சொன்னது போலவே கூட்டத்தில் காணாமல்போக விருப்பம் இல்லை. மிகவும் நேர்த்தியான, வலுவான கதாபாத்திரங்களில் நடிப்பேன்’ என குஷ்பு தெரிவித்துள்ளார்.