Bigil USA Desk Others

தளபதி விஜயின் தெறி படம் தெலுங்கு ரீமேக், ஹீரோ யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Thalapathy Vijay Atlee Theri Telugu Remake Hero Ravi teja

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தின் முதன் முறையாக வெளிவந்த படம் தெறி. இப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் தெலுங்கில் போலிஸ் என்ற பெயரில் டப் செய்து ரிலிஸ் செய்தனர். தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார்களாம், இதில் ரவிதேஜா ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.