www.garudabazaar.com

போதைக்கு எதிரான போர்க்களம் .. கையெழுத்திட்ட இயக்குநர் H.வினோத் - விபரம்.‌

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் இயக்குனர் H. வினோத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் (DYFI) போதையற்ற தமிழ்நாடு முழக்கத்திற்கு ஆதரவாக  கையெழுத்திட்டுள்ளார்.

DYFI Members Meet Valimai Thunivu Director H Vinoth

Images are subject to © copyright to their respective owners.

Also Read | துணிவு AK காஸ்டியூமில் வந்த சிறுவன்.. பார்த்ததும் அஜித் செய்த நெகிழ்ச்சி செயல்! வைரல் வீடியோ  

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர்  H.வினோத், சமூகவியல் மற்றும் அரசியல் குற்றம் தொடர்பான படங்களை படமாக்க கூடிய வினோத், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர். 

H.வினோத், இயக்கத்தில் சமீபத்தில் அஜித் நடிப்பில் துணிவு வெளியாகி உள்ளது. வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது. 

DYFI Members Meet Valimai Thunivu Director H Vinoth

Images are subject to © copyright to their respective owners.

'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

DYFI Members Meet Valimai Thunivu Director H Vinoth

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

DYFI Members Meet Valimai Thunivu Director H Vinoth

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்னும் முழக்கத்தினை முன் வைத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தினர் இயக்குனர் வினோத்தை நேரில் சந்தித்து போதையற்ற தமிழ்நாடு முழக்கத்திற்கு ஆதரவாக இயக்குனர் வினோத்திடம் கையெழுத்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இயக்குனர் வினோத் இயக்கிய 'வலிமை' திரைப்படம் போதைப்பொருள் மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரபல தமிழ் நடிகர் கையில்.. தோனி பயன்படுத்திய கிரிக்கெட் பேட்.. வைரலாகும் ட்வீட்!!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

DYFI Members Meet Valimai Thunivu Director H Vinoth

People looking for online information on DYFI Members, DYFI Members Meets Director H Vinoth, H Vinoth will find this news story useful.