www.garudabazaar.com

இமயமலையில் சுற்றுப்பயணம்.. ராயல் என்ஃபீல்டு பைக்கில் இயக்குனர் S.A. சந்திரசேகர்! செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் இமயமலை சுற்றுலா தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

SA Chandra Sekhar Vacation Photos from Himalayas

Also Read | பிரபல சென்னை ஹோட்டலில் சீரக சம்பா பிரியாணி.. ருசித்து சாப்பிட்ட நயன்தாரா & விக்னேஷ் சிவன்!

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்ற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ.  வரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குனராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர். விஜய்யை வைத்து படம் இயக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிங பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல்கள் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

கடைசியாக 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் 'அறிவழகன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி & சாக்ஷி அகர்வால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் இமயமலை சுற்றுலா புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். ராயல் என்ஃபீல்டு பைக்கில் அமர்ந்து இருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

Also Read | கீர்த்தி சுரேஷூக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த நண்பர்கள்.. ரசிகர்களை கவரும் சூப்பர் வீடியோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SA Chandra Sekhar Vacation Photos from Himalayas

People looking for online information on Himalayas, SA Chandrasekar, SA Chandrasekar Vacation Photos will find this news story useful.