எஸ் ஜே சூர்யாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா…?- கவனம் ஈர்த்த ‘கடமையை செய்’ டிரைலர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ் ஜே சூர்யா யாஷிகா ஆனந்த் நடித்துள்ள கடமையை செய் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

S J suryah yashika anand kadamaiyai sei trailer released

Also Read | செல்வராகவன் & கீர்த்தி சுரேஷின் ‘சாணிக் காயிதம்’ எப்படி இருக்கு?... தனுஷ் போட்ட வைரல் Tweet!

இயக்குனர் எஸ் ஜே சூர்யா…

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. அடுத்து அவர் விஜய்யை வைத்து இயக்கிய குஷி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் வெற்றியும் அவரை முன்னணி இயக்குனராக்கியது. குஷி படத்தை அவர் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்து வெற்றி பெற்றார். இன்றளவும் இந்த இரு படங்களும் அவரின் பேர் சொல்லும் படங்களாக உள்ளன.

நடிகர் எஸ் ஜே சூர்யா…

குஷி படத்துக்குப் பிறகு எஸ் ஜே சூர்யா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து நியூ என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். இரு மொழிகளிலும் கதாநாயகியாக சிம்ரன் நடித்தார். அந்த படம் பெற்ற கவனிப்பை அடுத்து தொடர்ந்து அன்பே ஆருயிரே, வியாபாரி, திருமகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். இதையடுத்து அவர் நடித்த இறைவி படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

S J suryah yashika anand kadamaiyai sei trailer released

ஹீரோ & வில்லன்…

விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து கவனத்தைப் பெற்றார். அதே நேரத்தில் மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி பெற்றார். சிம்புவுடன் அவர் நடித்த மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இப்போது பொம்மை, கடமையை செய் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

கடமையை செய்…

யாஷிகா ஆனந்தோடு எஸ் ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸூக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தை சிம்புவின் தந்தை டி ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படம் மே மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

S J suryah yashika anand kadamaiyai sei trailer released

சிவில் இஞ்சினியராக இருந்து வேலையை இழக்கும் எஸ் ஜே சூர்யா, அதன் பின் கிடைத்த வேலையை செய்கிறார். ஜாலியாக செல்லும் அவர் வாழ்க்கையில் ஒரு விபத்து திருப்புமுனையாக அமைகிறது. அந்த விபத்தால் stupor எனப்படும் உடல் பாகங்கள் செயல்படாத நிலைக்கு செல்கிறார். உடலின் உள்பாகங்கள் செயல்பட்டாலும், அவை வெளியில் தெரியாத நிலையில் அதன் மூலம் அவரும் அவர் குடும்பமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லும் படமாக இருக்கும் என டிரைலர் மூலம் தெரிகிறது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

எஸ் ஜே சூர்யாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா…?- கவனம் ஈர்த்த ‘கடமையை செய்’ டிரைலர்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

S J suryah yashika anand kadamaiyai sei trailer released

People looking for online information on எஸ் ஜே சூர்யா, கடமையை செய், யாஷிகா ஆனந்த், Kadamaiyai sei trailer, S J Suryah, Yashika anand will find this news story useful.