ET Others
www.garudabazaar.com

யாஷிகா ஆனந்த் வீடியோவில் பிரேம்ஜி செய்த குறும்பு… ரசிகர்களின் ட்ரோலையும் பகிர்ந்து ஜாலி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரேம்ஜி அமரன் நடிகை யாஷிகா ஆனந்தின் இன்ஸ்டாகிராம் வீடியோவில் கமெண்ட் செய்தது ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.

Premgi amaren comic comment on yashika anand video

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் வலம் வருபவர் பிரேம்ஜி அமரன். பல படங்களில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் காமெடி நடிகராக எல்லா படங்களிலும் பிரேம்ஜி நடித்து விடுவார். 42 வயதாகும் பிரேம்ஜி அமரன் இதுவரை திருமணம் செய்யாமல் செம ஜாலியாக, முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் காதலில் விழுந்துள்ளதாக செய்தி பரவ அதை மறுத்து ‘நான் எப்போதுமே மொரட்டு சிங்கிள்தான்’ என்று கூறியிருந்தார்.

Premgi amaren comic comment on yashika anand video

பிரேம்ஜி அமரனின் குறும்புகள்:

சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரேம்ஜி அமரன் பல நகைச்சுவையான ஸ்டேட்டஸ்களைப் பகிர்ந்து வருபவர். இதற்கென்றே அவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அதே போல மற்றவர்களின் பதிவுகளிலும் சென்று குறும்பாக ஏதாவது கமெண்ட் போட்டுவிட்டு வருவார். அப்படி இப்போது அவர் யாஷிகா ஆனந்தின் வீடியோவில் பதிந்த கமெண்ட் கவனத்தை ஈர்த்துள்ளது.

யாஷிகா ஆனந்த்:

இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேவந்த பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து தன்னுடைய நண்பர்கள் மற்றும் தோழியுடன் பாண்டிச்சேரி செல்லும் வழியில் ஈசிஆர் ரோட்டில் பெரும் கார் விபத்துக்கு யாஷிகா ஆனந்த் ஆளானார். அந்த சம்பவத்தில் அவருடைய தோழியையும் பறிகொடுத்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் முதுகெலும்பு மற்றும் கால் எலும்பு ஆகியவற்றில் பிரச்சினை இருந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Premgi amaren comic comment on yashika anand video

யாஷிகா வீடியோவில் கமெண்ட்:

சமூகவலைதளங்களில் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் யாஷிகா ஆனந்த் சமீபத்தில் இன்ஸ்டாவில்n ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் வழக்கம் போல பிரேம்ஜி அமரன் ஒரு குறும்பான கமெண்ட்டை பதிவு செய்ய ரசிகர்கள் அதைப் பார்த்து பிரேம்ஜி அமரனை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.  அதில் ரசிகர்கள் ‘மொதல்ல இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கனும். எல்லா பொன்னு போஸ்ட்லயும் ஹார்ட் விட்றான்’ எனக் கலாய்க்க, அதையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன்னுடைய ஸ்டோரியில் வைத்துள்ளார் பிரேம்ஜி.

தொடர்புடைய இணைப்புகள்

Premgi amaren comic comment on yashika anand video

People looking for online information on Premgi Amaren, Yashika anand will find this news story useful.