'KGF' இயக்குனர் பிரசாந்த் நீல் & 'RRR' ஜூனியர் NTR சந்திப்பு.. அடுத்த சம்பவம் ரெடி? வைரல் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது மனைவி, KGF திரைப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் அவரது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

RRR Jr NTR and KGF CHAPTER 2 Prashant Neel Meeting Photos NTR31

Also Read | மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாஸான ஆக்சன் படம்.. சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்!

இந்த இரு ஜோடிகளும் ஒன்றாக திருமண நாளை கொண்டாடுவதாக Jr NTR இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் கேஜிஎஃப்  இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் விரைவில் ஒரு புதிய படத்திற்காக கைகோர்க்க உள்ளனர். தங்கள் புதிய படப்பணியைத் தொடங்குவதற்கு முன்பே, இருவரும் தங்கள் திருமண ஆண்டு விழாவை ஒன்றாகக் கொண்டாடினர். 

பின்னூட்டத்தில், ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். அதில் ஒரு ரசிகர் எழுதினார்: "வரலாற்று அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்புகிறேன் " எனவும், மற்றொருவர் "அடடா" எனவும் பதிவிட்டனர்.

RRR Jr NTR and KGF CHAPTER 2 Prashant Neel Meeting Photos NTR31

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கேஜிஎஃப் 2 ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, மற்றொரு படத்தைப் பகிர்ந்து ட்விட்டரில், “ஆண்டுவிழா காதல் பறவைகள். இரு ஜோடிகளுக்கும் வாழ்த்துகள் ” என பதிவிட்டுள்ளார்.

RRR Jr NTR and KGF CHAPTER 2 Prashant Neel Meeting Photos NTR31

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் சமீபத்தில் காணப்பட்ட ஜூனியர் என்டிஆர், அடுத்து NTR30-ல் கொரட்டலா சிவா படத்தில் நடிக்க உள்ளார். பிரபாஸ் நடிக்கும் சலார் படத்த முடித்த பின் ஜூனியர் என்டிஆர் படத்தை (NTR31) மைத்ரி மூவி மேக்கர்ஸ்காக பிரசாந்த் நீல் இயக்க உள்ளார்.

RRR Jr NTR and KGF CHAPTER 2 Prashant Neel Meeting Photos NTR31

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் முதன்முறையாக ராம் சரண் உடன் நடித்தார். உள்ளூர் பழங்குடியினரின் பாதுகாவலரான கொமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

RRR Jr NTR and KGF CHAPTER 2 Prashant Neel Meeting Photos NTR31

ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் தற்போது முறையே RRR மற்றும் KGF: Chapter 2 ஆகிய படங்களின் வெற்றியில் திளைத்து வருகின்றனர். இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் ₹1000 கோடிக்கு மேல் வசூல் செய்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

'KGF' இயக்குனர் பிரசாந்த் நீல் & 'RRR' ஜூனியர் NTR சந்திப்பு.. அடுத்த சம்பவம் ரெடி? வைரல் அப்டேட் வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

RRR Jr NTR and KGF CHAPTER 2 Prashant Neel Meeting Photos NTR31

People looking for online information on Jr ntr, KGF Chapter 2, NTR31, Prashant Neel, RRR will find this news story useful.