www.garudabazaar.com

மனம் உடைந்த யாஷிகா!.. "நீ உயிரோட இல்லன்னு என்னால ஏத்துக்க முடியல".. உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“எனக்கு மட்டும் காலத்தை மாற்றக்கூடிய சக்தி கிடைத்தது என்றால் கண்டிப்பாக அன்னைக்கு நடந்த சம்பவத்தை நான் மாத்தி இருப்பேன்” என்று நடிகை யாஷிகா ஆனந்த், மறைந்த தனது தோழி பற்றிய நினைவலைகளை தற்போது உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

Yashika Aannand emotional video friend accident யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஈசிஆர் சாலையில் தன்னுடைய தோழி மற்றும் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து ட்வைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவத்தில் யாஷிகா மற்றும் அவருடைய நண்பர்கள் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனிடையே யாஷிகா தம்முடைய நெருங்கிய தோழியான பவானியை பறிகொடுத்தார். இதுதொடர்பாக, உருக்கமான பதிவுகளையும் யாஷிகா கண் விழித்த பின்னர் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மனமுடைந்து பேசியிருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

இது தொடர்பாக தற்போது அந்த வீடியோவில் பேசியுள்ள யாஷிகா ஆன்ந்த், “நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்.. நீ இல்லாமல் ஒவ்வொரு நாளையும் என்னால் எளிமையாக கடக்க முடியவில்லை. நான் மட்டும் நேரத்தை மாற்றக் கூடிய சக்தி பெற்றவளாக இருந்தால் கண்டிப்பாக அன்னைக்கு நடந்த அந்த விஷயத்தை நான் மாத்தி இருப்பேன். நம்முடைய ஞாபகங்களை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை.

நான் உனக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். நீ இப்போது தேவதையாக மாறி இருக்கிறாய். நீ மேலே இருந்து பார்க்கிறாய் என்று உணர்கிறேன். நீ ஒரு அழகான தேவதை. உன்னை நான் உடைத்து விட்டேன். உன்னை எப்போதும் மிஸ் பண்ணுகிறேன்.

குறிப்பாக நீ இல்லை என்பதை என் இதயம் ஏற்றுக்கொள்ளவே மாட்டேங்குது. அந்த அளவுக்கு நாம் உண்ட உணவுகள், நாம் போட்ட மேக்கப், நாம் உற்சாகமாக உரையாடியது என எல்லாவற்றிலும், உன் ஞாபகம் தான் எனக்கு எப்போதும் இருக்கிறது. நீ இப்போது இருப்பதைவிட ஒரு சிறப்பான இடத்தில் தான் இருக்கிறாய். நான் உன்னை சீக்கிரமாக பார்ப்பேன்!” என்று உருக்கமாகப் பேசி இருக்கிறார். நடிகை யாஷிகா ஆனந்த், இந்த வீடியோ பலரிடையே மிகவும் கண் கலங்க வைத்திருக்கிறது.

இதனிடையே நடிகை யாஷிகா ஆனந்த், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கும் கடமையை செய் திரைப்படம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இந்த திரைப்படத்தின் வெளியீட்டு அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

Also Read: என்னது? வடிவேலுவுடன் பிரியா பவானி சங்கரா? .. ஆஹா.. இது வேறல்ல இருக்கே.. அவரே பதிவிட்ட ட்வீட்!

மனம் உடைந்த யாஷிகா!.. "நீ உயிரோட இல்லன்னு என்னால ஏத்துக்க முடியல".. உருக்கமான பதிவு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yashika Aannand emotional video friend accident யாஷிகா ஆனந்த்

People looking for online information on Trending, Yashika Aannand will find this news story useful.