Veetla Vishesham Others Page USA

ரஜினி - நெல்சன் இணையும் புதிய படம்.. மிரட்டலான டைட்டிலுடன் வெளியான மாஸ் போஸ்டர்! போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : ரஜினிகாந்த் - நெல்சன் இணையும் புதிய படத்தின் தலைப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது.

Rajinikanth Nelson Dhilipkumar Thalaivar 169 Titled Jailer

Also Read | "விஜய் நடிச்சதுல எப்ப இந்த படம் போட்டாலும்.. " - விஜய் அம்மா ஷோபா பகிரும் குட்டி Story வீடியோ..!

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.  இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்தனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Rajinikanth Nelson Dhilipkumar Thalaivar 169 Titled Jailer

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த 169 வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலை இயக்குனர் கிரண், உடையலங்காரம் - பல்லவி ஆகியோர் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Rajinikanth Nelson Dhilipkumar Thalaivar 169 Titled Jailer

இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரத்தம் தோய்ந்த கத்தி பெரிய சங்கிலியால் கட்டப்பட்டு போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. வெளிர் மஞ்சள் நிறத்தில் டைட்டில் அமைந்துள்ளது.

Also Read | கமல் நடித்த விக்ரம் படத்தின் தமிழக வசூல்.. முதல் முறையாக மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Nelson Dhilipkumar Thalaivar 169 Titled Jailer

People looking for online information on Jailer, Nelson Dilipkumar, Rajinikanth, Rajinikanth Nelson Dhilipkumar Thalaivar 169, Super Star, Thalaivar 169 will find this news story useful.