Pattamboochi

Gal Gadot கூட நடிக்கும் முதல் ஹாலிவுட் படம்.. SUPER போட்டோவை வெளியிட்டு அப்டேட் கொடுத்த ஆலியா பட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR, கங்குபாய் கதியாவாடி படத்திற்கு பின் ஆலியா பட் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

Alia Bhatt Jamie Dornan Gal Gadot New Hollywood Movie Update

Also Read | பிரியாணிக்கு பதில் சாம்பார் சாதம்.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த BTS போட்டோ! மாமன்னன் அப்டேட்

நடிகை ஆலியா பட் , டாம் ஹார்ப்பர் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ், ஸ்கை டான்ஸ் தயாரிக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ஹால்  கடோட் (Gal Gadot) மற்றும் 'Fifty Shades Trilogy' நடிகர் ஜேமி டோர்னன் (Jamie Dornan) உடன் இணைந்து நடிக்க உள்ளார். ஏற்கனவே ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். இவ்வரிசையில் ஆலியாபட்டும் இணைந்துள்ளார்.

நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில், ஆலியா தனது படுக்கையில் படுத்துக் கொண்டு செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளார்.

Alia Bhatt Jamie Dornan Gal Gadot New Hollywood Movie Update

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த படத்தைப் பகிர்ந்த ஆலியா, “ஹார்ட் ஆஃப் ஸ்டோனில் மற்றொரு சிறந்த நாள் - மிகவும் சோர்வாக இருக்கிறது, ஆனால் எங்கள் பிரம்மாஸ்திரா படத்தின் மீதான அன்பினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வலிகள் அனைத்தையும் போகட்டும். உங்கள் அனைவருக்கும் அன்பு.” என எழுதியுள்ளார். ஆலியாபட், வெளிநாட்டில்  ஹார்ட் ஆஃப் ஸ்டோன்  படப்பிடிப்பில் இருக்கிறார், தனது முதல் ஹாலிவுட் திரைப்படமான ஹார்ட் ஆஃப் ஸ்டோனை முழுவீச்சில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

ஆலியா பட், தற்போது பிரம்மாஸ்திரா படத்தின் செப்டெம்பர் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இப்படத்தில் ஆலியா தனது கணவர் நடிகர் ரன்பீர் கபூரும் நடிக்கிறார். அயன் முகர்ஜி இயக்கத்தில் இந்த ஜோடி முதன்முறையாக நடித்துள்ளனர்.

ரன்பீர் - ஆலியா ஜோடி ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள இல்லத்தில் திருமணம் செய்து கொண்டனர். பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

ஆலியா, நடிகர் ரன்வீர் சிங்குடன் கரண் ஜோஹரின் இயக்கத்தில் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் நடித்து வருகிறார், இந்த படம் 2023 இல் வெளியாகிறது.

Also Read | நடிகை மர்லின் மன்றோவின் Bio Pic.. Ana de Armas நடிப்பில் வெளியான அசரவைக்கும் டீசர்! பட ரிலீஸ் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Alia Bhatt Jamie Dornan Gal Gadot New Hollywood Movie Update

People looking for online information on Alia Bhatt, Gal Gadot, Hollywood Movie Update, Jamie Dornan will find this news story useful.