777 Charlie Trailer

”இவ்ளோ நாள் நீங்க கொடுத்த support….” திருமணத்துக்கு பிறகு Press Meet-ல் நயன் & விக்கி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர்.

Nayanthara and vignesh shivan press meet after marriage

நட்சத்திர ஜோடிகள்

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

Nayanthara and vignesh shivan press meet after marriage

திருமணம்

இந்நிலையில் நேற்று முன் தினம் (ஜூன் 9) விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து பல திரையுலகப் பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. திருமணம் முடிந்த அடுத்த நாளே நேற்று மணமக்கள் திருப்பதிக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி கவனம் பெற்றன.

பத்திரிக்கையாளர் சந்திப்பு…

இந்நிலையில் முன்பே விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தது போல இன்று தம்பதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை நயன்தாரா, முதலில் பத்திரிகையாளர்களை நலம் விசாரித்ததுடன், அவர்கள் சௌகரியமாக ப்ரஸ் மீட்க்கு ஆயத்தமாகிவிட்டார்களா என கேட்டு உறுதி செய்துகொண்டு, பேசத் தொடங்கினார், அதில், “நீங்க எல்லாரும் இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி. நீங்க இவ்ளோ நாள் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரிய விஷயம்.. கல்யாணம் ஆயிடுச்சு.. இன்னும் உங்க ஆதரவு எங்களோட வாழ்க்கைக்கு ரொம்ப தேவை.. நன்றி” என்று பேசினார்.

Nayanthara and vignesh shivan press meet after marriage

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara and vignesh shivan press meet after marriage

People looking for online information on Nayanthara, Press Meet, Vignesh shivan will find this news story useful.