பிரம்மாண்ட படத்திற்காக விசாகபட்டினத்தில் விசிட் அடித்த ரன்பீர் - ராஜமௌலி.. வைரலாகும் Photo

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட்டுடன் இணைந்து "ஏ தில் கே முஸ்கில்" என்னும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

Ranbir kapoor ss rajamouli and ayan mukerji in vizag for brahmastra

Also Read | #BeSafeTamilCinema “அவர்கள் அபாயத்தில் இருக்கின்றனர்”… தயாரிப்பாளர் SR பிரபுவின் வைரல் Tweet!

இதற்கு அடுத்தபடியாக, இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. அயன் முகர்ஜி இயக்கி உள்ள இந்த திரைப்படத்தினை, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி வழங்கவுள்ளார்.

இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு படைப்பாக பிரம்மாஸ்திரா திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திரைப்படம் மூன்று பாகங்களாகவும் உருவாகி வருகிறது.

பிரம்மாண்டமாக உருவாகும் பிரம்மாஸ்திரா

பிரம்மாஸ்திராவின் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியுடன் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, செப்டம்பர் 09 ஆம் தேதி, "பிரம்மாஸ்திரா முதல் பாகம் : சிவா" வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, மிகவும் பிரம்மாண்டமாகவும் பிரம்மாஸ்திரா திரைப்படம் உருவாகி வருகிறது.

Ranbir kapoor ss rajamouli and ayan mukerji in vizag for brahmastra

விசாகபட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி

இதன் முதல் பாகத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருடன் அமிதாப்பச்சன், நாகர்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்நிலையில், பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், அசத்தல் அறிவிப்பு ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விசாகபட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இயக்குனர்கள் அயன் முகர்ஜி, ராஜமௌலி, நடிகர் ரன்பீர் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை ரசிகர்கள் முழுவதும் சூழ்ந்து கொண்டு, அமோகமான வரவேற்புடன் கொண்டாடித் தள்ளினர்.

Ranbir kapoor ss rajamouli and ayan mukerji in vizag for brahmastra

டிரைலர் ரிலீஸ் அப்டேட்

இதனைத் தொடர்ந்து, பிரம்மாஸ்திரா முதல் பாகமான சிவாவின் (Brahmāstra Part One: Shiva) டிரைலர் ரிலீஸ் குறித்தும் அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா மற்றும் மௌனி ராய் ஆகியோர் இருக்கும் Sneak Peek வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள படக்குழு, ஜூன் 15 ஆம் தேதி, டிரைலர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகமான சிவாவின் டிரைலரை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். மேலும், விசாகப்பட்டினத்தில், ரசிகர்கள் சூழ நின்ற ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி மற்றும் ராஜமவுலி ஆகியோரின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Ranbir kapoor ss rajamouli and ayan mukerji in vizag for brahmastra

அதே போல, பிரம்மாஸ்திரா படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 100 நாட்கள் இருப்பதால், #100DaysToBrahmastra என்ற ஹேஷ்டேக்கும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | மின்னல் முரளி பாத்துட்டு.. கமல் பகிர்ந்த விஷயம்.. வியப்பில் ஆழ்ந்த காளிதாஸ்.. 'Exclusive'

தொடர்புடைய இணைப்புகள்

Ranbir kapoor ss rajamouli and ayan mukerji in vizag for brahmastra

People looking for online information on பிரம்மாஸ்திரா, ரன்பீர் கபூர், ராஜமௌலி, Brahmastra Movie, Ranbir Kapoor, SS Rajamouli will find this news story useful.