Nenjuku Needhi

‘RRR’ ஹிட்டுக்குப் பின் ஜூனியர் NTR-ன் அடுத்த படம்…. வெளியான மாஸ் update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் NTR நடிக்கும் அடுத்த பட தகவல் இன்று இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Junior NTR next movie update details today

Also Read | பா ரஞ்சித் தயாரிப்பில் ‘அட்டகத்தி ‘ தினேஷ் நடிக்கும் J பேபி… டீசர் எப்போது- லேட்டஸ்ட் Update

RRR ஹிட்…

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான "RRR" படத்தில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடித்திருந்தனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார். ரிலீஸூக்குப் பின்னர் RRR படம் உலகமெங்கும் திரையரங்குகள் மூலமாக பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Junior NTR next movie update details today

கொமரம் பீமாக ஜூனியர் NTR

இந்த படத்தில் ஜூனியர் NTR கொமரம் பீம் என்ற பழங்குடியின விடுதலை போராட்ட வீரரின் பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆங்கிலேயர்களால் இழுத்து செல்லப்படும் சிறுமியை மீட்க செல்லும் பீம் சந்திக்கும் பிரச்சனைகளே கதையாக உருவாக்கப்பட்டு இருந்தது. ஜூனியர் NTR ன் இந்த கதாபாத்திரம் இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. RRR படத்துக்கு அவர் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் இருந்தார்.

Junior NTR next movie update details today

ஜூனியர் NTR 30…

இந்நிலையில் ஜூனியர் NTR ன் 30 ஆவது படத்தின் அறிவிப்பு இன்று இரவு 7.02 மணிக்கு வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் யாராக இருப்பார், தலைப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Junior NTR next movie update details today

RRR படத்தின் மற்றொரு ஹீரோவான ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Junior NTR next movie update details today

People looking for online information on Junior NTR, Junior NTR next movie update will find this news story useful.