"ப்ளீஸ்.. இத செய்யாதீங்க"... எமோஷனலாகி கதறி அழுத ஜனனி..! பரபரப்பில் இன்றைய பிக்பாஸ்.. bigg boss 6 tamil
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’.. விஷ்ணு விஷாலுக்கு வெச்சிருந்த டைட்டிலா? - பிரபல இயக்குநர்.!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. இதில் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இனிப்பு கடைகளை வைத்திருக்கின்றனர். இவற்றுக்கான தயாரிப்பு பண்டங்களுக்கான குறிப்பு அடங்கிய அட்டயை பிக்பாஸ் வீட்டுக்குள் கன்வேயர் வழியாக அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக சிறப்பாக பங்கெடுத்துக் கொள்ளாத ஒரு நபரை பிக் பாஸ் வீட்டில் இருந்து தேர்ந்தெடுத்து சொல்லச் சொல்லி பிக் பாஸ் கூறுகிறார். அப்போது விக்ரமன் ஜனனியை, தான் குறிப்பிட விரும்புவதாக சொல்கிறார். அதற்கு ஜனனி காரணத்துடன் சொல்ல வேண்டும் என்று விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனிடையே அமுதவாணன் எழுந்து விக்ரமிடம் ஏதோ பேச வர, இவர்கள் இருவரும் பேசிக் கொண்டால் வாக்குவாதம் ஆகிவிடும் என்பதை உணர்ந்த ஜனனி, “இல்லை கண்டிப்பாக வாக்குவாதம் செய்ய வேண்டாம்.. சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம்.. சண்டை வேண்டாம்” என்று சொல்லி எமோஷனலாகி கத்தி கதறி அழ தொடங்குகிறார். அவரை ஆயிஷா, மகேஸ்வரி என அனைவரும் தேற்றுகின்றனர்.
பிக் பாஸ் வீடு என்றாலே போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உடல் பலம் மற்றும் மூளை பலத்தை நிரூபிக்க வேண்டிய டாஸ்க் நிறைந்தது தான். இதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்தும் பார்வையும் இருப்பதால் பல இடங்களில் அவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதற்கு வாய்ப்பு இருகிறது. தவிர, டாஸ்குகளின்போது ஒருவர் செய்ததை இன்னொருவர் தவறாக புரிந்து கொள்வதும் சிலர் வேண்டுமென்றே இன்னொருவரிடம் ஆவேசமாக பேசுவதும் நடந்து கொள்வதும் என்பது பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.
முன்னதாக அமுதவாணன் மற்றும் விக்ரமன் இருவருக்கும் இடையே நீண்ட பெரும் வாக்குவாதம் சென்றது,. இதில் அமுதவாணன் விக்ரமன் செய்த செய்ல் ஒன்றை குறிப்பிட்டு, அதை விக்ரமன் ஒப்புக்கொள்ளாததால், அவர் பொய்கூறுவதாக குற்றம் சாட்ட அதுகுறித்து விக்ரமன் பதிலுக்கு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அமுதவாணன் உங்கள் அளவுக்கு என்னால் பேச, எதுவாக இருந்தாலும் குறும்படம் போடட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று பேசிவிட்டு சென்றுவிட்டார்.
இதேபோல் விக்ரமன் மற்றும் அசீம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் சென்றது. அதில் விக்ரமனிடம் அசீம், “நீங்கள் எனக்கும் ஜனனிக்கும் பஞ்சாயத்து பண்ணாதீர்கள்!” என்று கூற, “பஞ்சாயத்து நான் பண்ணவில்லை” என்று விக்ரமன் கொதித்தார். பதிலுக்கு அசீமும், “என் வார்த்தைகளை பிடுங்கி சண்டை போட நான் ஆளில்லை” என்று பேசினார். இவற்றையெல்லாம் அருகில் இருந்து பார்த்த ஜனனி, தற்போது சண்டை வருவதற்கு முன்பே, சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள் என்று அழத் தொடங்கி இருப்பது பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் பிக் பாஸ் ரசிகர்கள் இடையே பெருத்த கவனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read | 23 வருசத்துக்கு பின் ராமராஜன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா..! கடைசியா இணைந்த படம் இதுதான்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Dhanalakshmi About Azeem Ram In Factory Task Bigg Boss 6 Tamil
- ADK Emotional Over Janany Complaint Bigg Boss 6 Tamil
- Bigg Boss Tamil Season 6 Dhanalakshmi Manikanta Rajesh Compromise
- Tamil BIGG Boss Season 6 Ayesha Want Cheese Burger
- Is Azeem Big Rowdy Robert Funny Speech Bigg Boss 6 Tamil
- Robert Asking Kiss To Myna And Rachitha Bigg Boss 6 Tamil
- Amudhavanan And Vikraman In Arguement In Biggboss 6 Tamil
- Rachitha And Robert Master Conversation In Bigg Boss 6 Tamil
- Kamalhaasan Warning Housemates Discipline Bigg Boss 6
- Bigg Boss 6 Tamil Sherina Eliminated Kamalhaasan Announced
- Vikraman Holds Sherina In Trp Task Bigg Boss 6 Tamil
- Rachitha Enjoying In Rain Robert Scolded Her Bigg Boss 6 Tamil
தொடர்புடைய இணைப்புகள்
- "Ladies கிட்ட எப்படி நடந்துக்கணும் தெரியல..." Dhanalakshmi VS Mani | Bigg Boss Public Review Video
- 🔴LIVE: ச்ச வெளிய போறேன்டா! Sister-ஆ பாத்தேன், இப்படி நினைச்சிட்டா😡 தோலுரிக்கும் Fatman Review Day 32
- "Ram எல்லாத்துக்கும் காரணம் நீதான், நீ ஒரு வளர்ந்த நரி"😂 கோபத்தில் கத்திய JANANY
- "எங்க பணத்தை பாத்துட்டா, Dhanalakshmi-க்கு தண்டனை கொடுங்க Bigg Boss"... கடுப்பான Nivashini
- 😡LIVE: "அடிச்சி தும்சம் பண்ணட்டா 😭 அய்யோ வலிக்குது.., மேல ஏறாத"😡தோலுரிக்கும் Fatman Review BB Day 31
- முத்தமா… 🥰 "Robert Master, Ratchitha கிட்ட கொஞ்சி கொஞ்சி பேசுறாரு…" Bigg Boss Girls Opinion Video
- "அய்யோ என்னை விடு"... கத்தி கூச்சலிட்ட Dhanalakshmi... கீழ தள்ளிவிட்ட Manikanta Rajesh 😳 Bigg Boss
- "ச்சீ!! ஏலே அவ்ளோ Cheap-ஆன ஆளா நீ"😠கடுப்பான Bigg Boss GP Muthu😡 Office Days Climax Episode
- 🔴 Bigg Boss Sherina First Video After ELIMINATION... வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி 🔥
- 🔴LIVE: "சும்மா நோண்டிகிட்டு" போர்களமாகிய வீடு 💥 Vikraman, Amudha, Ayesha, ADK 🔥தோலுரிக்கும் Fatman
- "Rachitha, எனக்கு Kiss கொடு"... அடம்புடிச்ச Robert Master!.. கையெடுத்து கெஞ்சிய Rachitha 😳
- 🔴LIVE: Rachitha: அட போடி இப்டியா...Robert இப்படி பண்ணாதீங்க, என் மேல தப்புன்னு 🤔 தோலுரிக்கும் Fatman