www.garudabazaar.com

"அடிச்சனா..?" - கொதித்த மணி.. "நான் ஒன்னும் காமெடியன் இல்ல.." - அமுதவாணன் ஆவேசம்.! இன்றைய பிக்பாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

manikandan amuthavanan fight factory task bigg boss 6

Also Read | "ப்ளீஸ்.. இத செய்யாதீங்க"... எமோஷனலாகி கதறி அழுத ஜனனி..! பரபரப்பில் இன்றைய பிக்பாஸ்.. bigg boss 6 tamil

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

manikandan amuthavanan fight factory task bigg boss 6

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

manikandan amuthavanan fight factory task bigg boss 6

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. இதில் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இனிப்பு கடைகளை வைத்திருக்கின்றனர். இவற்றுக்கான தயாரிப்பு பண்டங்களை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

manikandan amuthavanan fight factory task bigg boss 6

இந்நிலையில் தற்போது கன்வேயர் வழியாக வரக்கூடிய பொருட்கள் விபரங்கள் குறித்த துடுப்பு அட்டைகளை சிலர் கன்வேயர் மீது ஏறி படுத்து உள்ளே கையை விட்டு எடுக்கின்றனர். அவ்வாறு எடுக்கக் கூடிய அணியினருக்கு உண்டான உப பொருட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ஸ்டோர் ரூமுக்குள் வைக்கப்படும், இதில் ஏற்படும் தள்ளுமுள்ளுவால், ‘நீ என்னை தள்ளிவிட்டாய்’,  ‘நீ என்னுடைய அட்டையை பிடுங்கி கொண்டாய்’ உள்ளிட்ட ச்சண்டைகள் ஏற்கனவே தனலட்சுமி - மணிகண்டன், விக்ரமன் - அமுதவாணன் ஆகியோருக்கு இடையே வந்திருந்தது.

manikandan amuthavanan fight factory task bigg boss 6

இப்போது இதில்தான் மணிகண்டன் - அமுதவாணன் இடையே சண்டை வெடித்துள்ளது. இதில் அமுதவாணன், மணிகண்டன் ராஜேஷ் தன்னை அடித்து, டாஸ்க் ஆடியதாக குற்றஞ்சாட்டுகிறார். அதற்கு மணிகண்டனோ, ‘நீங்கள் நன்றாக ஃப்ரேம் பண்ணுகிறீர்கள்’ என்கிறார்.

manikandan amuthavanan fight factory task bigg boss 6

மேலும் அமுதவாணன் இந்த விஷயத்தில் மேலும் டென்ஷனாகி, ‘நான் ஒன்னும் காமெடியக பேசுவதால் காமெடியன் இல்லை.. நான்  ஒன்னும் மொக்கை இல்லை’ என டாஸ்க் என வந்துவிட்டால் தானும் அனைவரையும் போல பலமிக்கவர் தான் என்பதை கூறுகிறார். இவர்களின் சண்டை பிக்பாஸ் வீட்டில் புதிதாக முளைத்துள்ளது.

Also Read | ஜிம்மில் உடற்பயிற்சியின்போது சீரியல் நடிகர் மரணம்! பாலிவுட் ரசிகர்கள் ஷாக்.. Siddhaanth Surryavanshi

தொடர்புடைய இணைப்புகள்

manikandan amuthavanan fight factory task bigg boss 6

People looking for online information on Amuthavanan, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Manikandan will find this news story useful.