www.garudabazaar.com

அதர்வா - ராஜ்கிரண் நடிப்பில் உருவாகும் பட்டத்து அரசன்.. லைகா அறிவித்த ரிலீஸ் தேதி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

atharvaa and rajkiran next pattathu arasan release date announced

Also Read | Childrens Day தினத்தன்று.. ராஷ்மிகா பகிர்ந்த 'இன்ஸ்டா' பதிவு.. வைரலாகும் கேப்ஷன்!!

கத்தி, செக்கச் சிவந்த வானம், தர்பார், பொன்னியின் செல்வன் 1 உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து முன்னணியில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைகா புரொடக்ஷன்ஸ். இதில் சமீபத்தில் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படம், சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் உலக அளவில் வசூல் செய்திருந்தது.

இதற்கு அடுத்ததாக இந்தியன் 2, லால் சலாம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட திரைப்படங்களையும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

atharvaa and rajkiran next pattathu arasan release date announced

இதில், பட்டத்து அரசன் திரைப்படத்தில் அதர்வா மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் அதிக கவனம் ஈர்த்த இயக்குனர் சற்குணம் தான் பட்டத்து அரசன் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். மேலும் ’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம்  இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார்.

‘பட்டத்து அரசன்’ திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகை மற்றும் ஆடு பண்ணை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங்கில், ஆண்டனியின் கலை இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷனின் தலைமை G.K.M. தமிழ்க்குமரன்  மேற்பார்வையில் இந்த படம் உருவாகி வருகிறது.

atharvaa and rajkiran next pattathu arasan release date announced

சமீபத்தில் பட்டத்து அரசன் படத்தின் போஸ்டரும் வெளியாகி இருந்தது. ராஜ்கிரண் மற்றும் அதர்வா ஆகியோர் கம்பீரமாக நடந்து வருவது போன்றும் இந்த போஸ்டர் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், பட்டத்து அரசன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பகிரப்பட்டுள்ள வீடியோவில், பட்டத்து அரசன் படத்திற்கு 'U' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, வரும் நவம்பர் 25 ஆம் தேதியன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதர்வா நடிப்பில் இதற்கு முன்பு குருதி ஆட்டம், ட்ரிக்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "Top டூ Bottom முழுக்க கோல்டு தான்".. வித்தியாசமான கெட் அப்பில் கார்த்தி.. Japan First Look!!

 

தொடர்புடைய இணைப்புகள்

atharvaa and rajkiran next pattathu arasan release date announced

People looking for online information on Atharvaa Murali, Pattathu Arasan, Pattathu arasan movie updates, Rajkiran will find this news story useful.