www.garudabazaar.com

"என்ன பிடிச்ச மாதிரி நடிக்கலாம்ல.?".. ஃபீல் பண்ணிய ராபர்ட்.. ரச்சிதா வைரல் பதில்.! bigg boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

robert asks rachitha to act liking him bigg boss 6

Also Read | எப்புடுறா டக்குனு திருந்த முடியும்..! - அசீம் பற்றி கிசுகிசுத்த மைனா - ஆயிஷா .. வைரல் ப்ரோமோ bigg boss 6

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

robert asks rachitha to act liking him bigg boss 6

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

robert asks rachitha to act liking him bigg boss 6

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடந்துள்ளது. இதில் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இனிப்பு கடைகளை வைத்தனர். இவற்றுக்கான தயாரிப்பு பண்டங்களை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்தனர். இதில் உருவான விஷயங்கள் குறித்து இந்த வார் இறுதியில் கமல்ஹாசன் பேசியிருந்தார்.

இவர்களுள் மகேஸ்வரி பொருத்தவரை தொடக்கம் முதலே ஆக்டிவாக இருந்தார். கிச்சனில் பொறுப்புடன் சமைத்து வந்த இவர்,  ஆங்காங்கே சண்டைகள் சச்சரவுகள் தொடங்கி பிக் பாஸ் வீட்டில் தம்முடைய பங்களிப்பை கொடுக்கும் வகையிலும் இருப்பை காட்டும் வகையிலும் நடந்துள்ளார். அதே சமயம் சகப் போட்டியாளர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார். சகப் போட்டியாளர்களால் விமர்சிக்கவும் பட்டிருக்கிறார். பாராட்டவும் செய்யப்பட்டிருக்கிறார். இவர்தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

robert asks rachitha to act liking him bigg boss 6

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவிடம் பேசியுள்ள விசயம் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ராபர்ட் மாஸ்டரிடம் நேரடியாகவே பேசியிருந்த ரச்சிதா "ஏன் இப்படி அப்நார்மலாக நடந்து கொள்கிறீர்கள்?. நார்மலாக இருங்களேன். நீங்க என்ன எவ்வளவு கலாய்க்குறீங்க, பதிலுக்கு நான் ஒன்னும் சொல்ல கூடாதா?. ஏன் இப்படி இருக்கீங்க. நீங்க பண்றது குழந்தைத்தனமா இருக்கு. உங்களுக்கு அது தெரியுதா?. எதோ எதிரி மாதிரி Behave பண்றீங்க. எதிர்ல் இருக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?. நீங்க நார்மலா இருங்க" என அட்வைஸ் செய்திருந்தார்.

இந்நிலையில் ரச்சிதாவிடம் சென்று பேசும் ராபர்ட் , “நீங்கள் நடித்து தானே ஆக வேண்டும் என்கிறீர்கள்.. அப்படி என்றால் என்னை பிடித்தது போல் நடிக்க வேண்டியதுதானே..?” என்று கேட்கிறார். அதற்கு ரச்சிதாவோ, “அப்படி எல்லாம் இருக்க முடியாது. இது பிக் பாஸ் வீடு. அப்படி நடித்தால் தப்பாகிவிடும், அது எப்படி ஒருவரிடம் அப்படி நடிப்பது? நான் நடிப்பதற்காக இங்கு இல்லை. எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே காட்ட வேண்டும், அவ்வளவுதான்!” என்கிறார்.

Also Read | "வெளிய வந்து பார்த்தா தான் தெரியுது.!".. எலிமினேட் ஆன VJ மகேஸ்வரி முதல் வீடியோ..! bigg boss 6 tamil

தொடர்புடைய இணைப்புகள்

robert asks rachitha to act liking him bigg boss 6

People looking for online information on Bigg boss 6 maheswari, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Maheswari elimination will find this news story useful.