www.garudabazaar.com

எப்புடுறா டக்குனு திருந்த முடியும்..! - அசீம் பற்றி கிசுகிசுத்த மைனா - ஆயிஷா .. வைரல் ப்ரோமோ bigg boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ayesha myna viral talk about azeem change over bigg boss 6

Also Read | துணிவு ஷூட்டிங்கில் அஜித்துடன் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்.. வைரலாகும் BTS போட்டோ..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ayesha myna viral talk about azeem change over bigg boss 6

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

ayesha myna viral talk about azeem change over bigg boss 6

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. இதில் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இனிப்பு கடைகளை வைத்திருக்கின்றனர். இவற்றுக்கான தயாரிப்பு பண்டங்களை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

ayesha myna viral talk about azeem change over bigg boss 6

இவர்களுள் மகேஸ்வரி பொருத்தவரை தொடக்கம் முதலே ஆக்டிவாக இருந்தார். கிச்சனில் பொறுப்புடன் சமைத்து வந்த இவர்,  ஆங்காங்கே சண்டைகள் சச்சரவுகள் தொடங்கி பிக் பாஸ் வீட்டில் தம்முடைய பங்களிப்பை கொடுக்கும் வகையிலும் இருப்பை காட்டும் வகையிலும் நடந்துள்ளார். அதே சமயம் சகப் போட்டியாளர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார். சகப் போட்டியாளர்களால் விமர்சிக்கவும் பட்டிருக்கிறார். பாராட்டவும் செய்யப்பட்டிருக்கிறார். இவர்தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

ayesha myna viral talk about azeem change over bigg boss 6

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் மைனா மற்றும் ஆயிஷா இருவரும் அசீம் பற்றி பேசிக் கொள்கின்றனர். அப்போது, “முந்தைய டாஸ்கில் அசீம் மிகவும் கோபப்பட்டதை நாம் பார்த்தோம் ஆனால் தற்போதைய பேக்டரி டாஸ்க்கில் அவர் டக்குனு மாறிவிட்டார். இது எப்படி என்றே புரியவில்லை, சனிக்கிழமை ஆனாலே அவர் திடீரென்று இப்படி திருந்திவிடுகிறார்” என்று ஆயிஷா பேசிக் கொண்டிருக்கிறார. இதற்கு பதில் அளித்த மைனா,  “அப்படி எல்லாம் ஒருவரால் டக்கென திருந்த முடியாது. உதாரணமாக ஒருவர் எப்போதும் சிரித்துக் கொண்டே  இருப்பது சிலருக்கு கடுப்பாகுது என்றால் சில நேரங்களில் சிரிக்காமல் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடியும். ஆனால் நீண்ட நேரம் அப்படி இருக்க முடியாது, நான் என்றால் திரும்பவும் சிரித்து விடுவேன். ” என்கிறார்.

ayesha myna viral talk about azeem change over bigg boss 6

பின்னர் ஆயிஷா பேசும்போது, “இவர் பொசுக்கு பொசுக்கென மாறி விடுகிறாரே.. ஆனால் இவரை நாம் காரணத்துடன் முத்திரை குத்து விடலாம். அதை அவரும் கெத்தாக எடுத்துக் கொள்வது நமக்கும் சௌகரியமாகவே இருக்கிறது.” என கூற, மீண்டும் மைனா, “இல்லை அசீம் மறைமுகமாகவாவது கேம் ஆடி இருக்கலாம். தான் சட்டென மாறிவிட்டதாக திகழ்கிறார். ஆனால் உண்மையில்

அவர் கேம் ஆடாமல் எல்லாம் இல்லை. அவர் கேம் சைலன்டாக ஆடுகிறார். பார்ப்போம் இந்த வாரம் என்ன செய்கிறார் என்று.. எப்படி விளையாடுகிறார் என்று” என சொல்கிறார்.

ayesha myna viral talk about azeem change over bigg boss 6

இந்த வாரம் அசீம் பற்றிய தங்கள் கருத்துக்களை கமல்ஹாசன் முன்னிலையில் அனைவரும் முன்வைத்து அவரை சர்க்கரை பாகு நீர் குடிக்கவைத்தனர், அப்போது அசீம் திடீரென அமைதியாக மாறிவிட்டதையே பலரும் குறிப்பிட்டு தங்கள் புகாரை வைத்தனர். அதற்கு அசீமோ, “என்ன சார் இது.. அப்படி இருந்தாலும் நாமினேட் பண்றாங்க.. இப்படி இருந்தாலும் நாமினேட் பண்றாங்க..வேற எப்படிதான் இருக்குறது..” என்று விளையாட்டாக சிரித்தபடி பேசியிருந்தார்.

Also Read | "வெளிய வந்து பார்த்தா தான் தெரியுது.!".. எலிமினேட் ஆன VJ மகேஸ்வரி முதல் வீடியோ..! bigg boss 6 tamil

தொடர்புடைய இணைப்புகள்

ayesha myna viral talk about azeem change over bigg boss 6

People looking for online information on Bigg boss 6 maheswari, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Maheswari elimination will find this news story useful.