''ஒருநாள் கவின் கோலிவுட்ட கலக்குவாரு'' - இப்படி சொன்னது தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவின் நடிக்கும் 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கவினுக்கு ஜோடியாக 'பிகில்' புகழ் அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

RJ Vijay praises actor and Bigg Boss fame Kavin for this reason | ஆர்ஜே விஜய், பிக்பாஸ் கவினை பாராட்டிப் பதிவு

இந்நிலையில் பிரபல தொகுப்பாளரும், பாடலாசிரியருமான ஆர்ஜே விஜய்யிடம் ரசிகர் ஒருவர் கவின் குறித்து கேட்டார். அதற்கு 'நட்புனா என்னனு தெரியுமா?' பட ஸ்டில்லை பகிர்ந்து பதிலளித்த ஆர்ஜே விஜய், செம டெடிகேஷன் உள்ள ஒரு ஆளு. இந்த ஃபோட்டோ ரொம்ப ஸ்பெஷல் காரணம், இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஸ்ரீலங்கா போனப்போ அங்க ஒரு பெட்டிக்கடைல பாத்தேன்.

அது 'நட்புனா என்னனு தெரியுமா?' ரிலீஸ் டைம். பாத்து செம ஹேப்பியாகிட்டு கவினுக்கு இந்த ஃபோட்டோ சென்ட் பண்ணேன். அவர் சீக்கிரம் கோலிவிட்ட கலக்குவாரு. என்று தெரிவித்தார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்த கவின், நாம கலக்குவோம் என்று தெரிவித்தார்.

Entertainment sub editor