நம்ம பிக்பாஸ் கவினை இப்படி கதறி அழ வைச்சுட்டாங்களே..ஓகோ.. இதுதான் காரணமா.?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் அழுவதாகவும் அதற்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் கவின். இவர் தமிழில் நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற தமிழகமெங்கும் பிரபலமானார். இவர் தற்போது நடிகை அம்ரிதா அய்யருடன் லிஃப்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். Miracle in Cell No. 7 எனும் டர்கிஷ் படத்தை அவர் இன்று பார்த்துள்ளார். அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை மையப்படுத்தி உருவான இத்திரைப்படத்தை பார்த்த பின்னர், 'முடிவில்லாமல் அழுது கொண்டிருக்கிறேன்'' என அவர் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸால் வீட்டில் இருக்கும் பலரும் இத்திரைப்படத்தை பார்த்து தற்போது சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.