ஹோட்டல் இல்லைன்னா என்ன.. இவங்க செஞ்ச வேலைய பாருங்க.! பிக்பாஸ் கவின் பகிர்ந்த செம வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் விடியோவை பகிர்ந்துள்ளார். 

பிக்பாஸ் கவின் பகிர்ந்த க்யூட் ஸ்டோரி | biggboss fame actor kavin shares a cute video

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் கவின். இவர் தமிழில் நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற தமிழகமெங்கும் பிரபலமானார். இவர் தற்போது நடிகை அம்ரிதா அய்யருடன் லிஃப்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து ஹோட்டல்கள், மால் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், வெளிநாட்டில், தங்கள் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற அவர்களின் பெற்றோர்கள், வீட்டை ஹோட்டல் போல செட் செய்து, இரண்டு குழந்தைகளையும் கஸ்டமர்கள் போல கவனிக்கிறனர். இணையத்தில் வைரலான இந்த வீடியோவை கவின் பகிர்ந்து ஹார்ட்டின் எமோஜியை பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kavin M (@kavin.0431) on

Entertainment sub editor