'இந்தியா ஜெய்ச்சதுக்கு மூக்குத்தி அம்மனின் அருள் காரணமா ?' - ஆர்ஜே பாலாஜி ஜாலி பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 11, 2019 12:07 PM
'எல்கேஜி' படத்துக்கு பிறகு ஆர்ஜே பாலாஜி 'மூக்குத்தி அம்மன்' என்ற படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, என்ஜே சரவணனுடன் இணைந்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி K.கணேஷ் தயாரிக்கிறார். இந்த படம் சம்மர் ரிஸீஸாக திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் நேற்று (10.11.2019) இந்தியா - வங்கதேசம் இடையே நடந்த மூன்றாவது டி20 போட்டியை தமிழில் ஆர்ஜே பாலாஜி தொகுத்து வழங்கினார்.
இந்த போட்டியில் இந்திய அணி வென்று தொடரை 2-1 என கணக்கில் கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் தீபக் சாஹர் 3.2 ஓவர்கள் பந்து வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இந்திய அணியின் வெற்றி குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தொகுப்பாளர் கார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில், ''இறுதியாக இந்தியா வென்றது. தீபக் சாஹர் வெறித்தனம். எல்லாம் மூக்குத்தி அம்மனோட அருள் என்று ஆர்ஜே பாலாஜியை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு ஆர்ஜே பாலாஜி, ஹா ஹா ஆமா'' என பதிலளித்துள்ளார்.
Hahaha yes 😆😍 https://t.co/VMTXr9CExB
— RJ Balaji (@RJ_Balaji) November 10, 2019