விஷாலின் ஆக்ஷனுக்காக பாடிய ‘பாகுபலி’ ஸ்டார்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 11, 2019 12:04 PM
நடிகர் விஷால் நடித்துள்ள ‘ஆக்ஷன்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஹிப்ஹாப் நம்பர் பாடல் ஒன்றை பாகுபலி பிரபலமான நடிகர் ராணா பாடியுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ஆக்ஷன்’ திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகைகள் தமன்னா, ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ராம்கி, யோகி பாபு, துஹான் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தில்இடம்பெற்றுள்ள ‘லைட்ஸ் கேமரா ஆக்ஷன்’ பாடலின் தெலுங்கு வெர்ஷனுக்காக பாகுபலி நடிகர் ராணா முதன்முறையாக ராப் பாடியுள்ளார். இதனை இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆ.ரவிந்திரனின் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘ஆக்ஷன்’ திரைப்படம் வரும் நவ.15ம் தேதி ரிலீசாகவுள்ளது. விஷால் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
For the first time ever, @RanaDaggubati raps 😎
Been a huge fan of him and he spit 8bars for the telugu version of #LightsCameraAction - 🤟🏻🤟🏻🤟🏻Thank you Rana anna, U R DA COOLEST 🎉 pic.twitter.com/YwNHzmdIdg
— Hiphop Tamizha (@hiphoptamizha) November 10, 2019