"My dear Pullingo.." கோலிவுட் அறிமுகம் குறித்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 15, 2019 04:15 PM
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருப்பது குறித்து இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ட்வீட் செய்துள்ளார்.

‘கடாரம் கொண்டன்’ திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தை ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஹீரோயினாக KGF படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்ஃபான் பதான் ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நேற்று (அக்.14) வெளியானது.
இதையடுத்து, இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் அன்பான புள்ளைங்கோ எல்லாதுக்கும் வணக்கம். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குநர் அஜஜ் ஞானமுத்துவுடன் ‘சீயான் 58’ படத்தில் இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு தொடரட்டும் நன்றி. மஜா பன்றோம்..!” என ட்வீட் செய்துள்ளார். விக்ரம் 58 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம்🙏🙏, நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி... நடிகர் #vikram , இசைப்புயல் @arrahaman மற்றும் இயக்குனர் @ajaygnanamuthu உடன் #Chiyaan58 இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன்🥳🥳 . உங்களுடைய ஆதரவு தொடரட்டும், நன்றி🙏🙏
மஜா பன்றோம்...
— Irfan Pathan (@IrfanPathan) October 15, 2019