''இது தான் ஹர்பஜனை ரொம்ப மாத்தியிருக்கும்'' - கிரிக்கெட்டரும் நடிகருமான ஸ்ரீசாந்த் விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 05, 2019 09:26 AM
இந்திய அணியின் ஆக்ரோஷமான பவுலராக களத்தில் செயல்பட்டு வந்தவர் ஸ்ரீசாந்த். சில காலமாக கிரிக்கெட் விளையாடமால் இருக்கும் அவர் தற்போது 'டீம் 5' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீசாந்த் தற்போது Behindwoods Airக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது ஹர்பஜன் சிங் விவகாரத்தில் ஸ்ரீசாந்த் குறித்து ஹர்பஜன் Behindwoodsக்கு அளித்த பேட்டியில் வருத்தம் தெரிவித்திருந்தார்.
அதை பற்றி ஸ்ரீசாந்திடம் கேட்ட போது, சென்னை வந்த பிறகு அவரிடம் நிறைய முன்னேற்றம் தெரிகிறது. சென்னை கலாச்சாரம் வித்தியாசமானது. மும்பை போன்றது அல்ல. சென்னை மக்களோட இருக்கும் போது கோபம்லா குறைஞ்சுடும். அவங்க நிறைய அன்பு காட்டுவாங்க. அதனால் ஹர்பஜன் இனிமையானவராக மாறிவிட்டார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங் தற்போது சந்தானத்துடன் இணைந்து 'டிக்கிலோனா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர் ஃபேக்டரி நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கார்த்திக் யோகி இந்த படத்தை எழுதி இயக்கி வருகிறார்.
''இது தான் ஹர்பஜனை ரொம்ப மாத்தியிருக்கும்'' - கிரிக்கெட்டரும் நடிகருமான ஸ்ரீசாந்த் விளக்கம் வீடியோ