www.garudabazaar.com
iTechUS

"அடிக்காதமா, வலி தாங்க முடியல".. கதறிய டான்சர் ரமேஷ்.. பழைய வீடியோவால் பரபரப்பு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த டான்சர் ரமேஷ், திடீரென உயிரிழந்து போனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Dancer Ramesh old video viral after his death

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | விக்ரமனுக்கு பறந்த மெசேஜ்.. அடுத்த கணமே செஞ்ச நெகிழ்ச்சி காரியம்..

டிக் டாக், சமூக வலைத்தளங்களில் தனது டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் டான்சர் ரமேஷ். சற்று வயதான நபராக ரமேஷ் இருந்த போதிலும், அவரது டான்ஸ் மூலம் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தார்.

அது மட்டுமில்லாமல், தனது நடன திறமை மூலம் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். மேலும், அவருக்கான ரசிகர்கள் ஆதரவும் பல மடங்கு பெருகியது. இதனைத் தொடர்ந்து, ஒரு சில படங்களிலும் தோன்றி இருந்தார் ரமேஷ்.

Dancer Ramesh old video viral after his death

நல்ல புகழுடனும் ரமேஷ் விளங்கி வந்த நிலையில், திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்து போனார். சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த விஷயம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து டான்சர் ரமேஷ் மரணம் குறித்து விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில், ரமேஷின் பழைய வீடியோக்களும் இணையத்தில் அதிகம் வைரலான வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தற்போது டான்சர் ரமேஷ் தொடர்பான ஒரு வீடியோ, இணையத்தில் வெளியாகி கடும் பீதியை உண்டு பண்ணி உள்ளது.

Dancer Ramesh old video viral after his death

Images are subject to © copyright to their respective owners.

இது தொடர்பாக இணையத்தில் வட்டம் அடிக்கும் வீடியோ ஒன்றில், பெண் ஒருவர் கையில் கம்பு வைத்து கொண்டு இருக்க, அடிக்காதீங்க வலிக்குது என டான்சர் ரமேஷ் கூறுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர் கையில் மின் விசிறி ஒன்றும் இருக்கும் சூழலில், யாரிடமோ கெஞ்சுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுளளது.

இது ஆக்டிங் போல எடுக்கப்பட்ட வீடியோவா அல்லது நிஜமாக நடந்த சம்பவமா என்பது குறித்த விவரம் சரிவர தெரியவில்லை.

Also Read | "அந்த மாதிரி பேசுறவங்க பாவம்.." விக்ரமன்கிட்ட போய் நின்ன கமல்.. அசிம் ரியாக்ஷன் இது தான்!!

தொடர்புடைய இணைப்புகள்

Dancer Ramesh old video viral after his death

People looking for online information on Dancer Ramesh, Dancer Ramesh old video will find this news story useful.