www.garudabazaar.com

BREAKING: பிரபல இயக்குனர் இயக்கத்தில் R J பாலாஜி நடிக்கும் புதிய படம்.. செமயான Combo இது! அசத்தல் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் நமக்கு கிடைத்துள்ளது.

RJ Balaji Singapore Saloon shoot starts today

Also Read | BREAKING: வெளிநாட்டில் AK61 படத்தின் ஷூட்டிங்? ஆஹா! அதுவும் இந்த நாட்லயா? தெறி அப்டேட்

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

RJ Balaji Singapore Saloon shoot starts today

கடைசியாக பாலாஜி, போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக் வீட்ல விசேஷம் படத்தில் நடித்தார். "வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்றது.

RJ Balaji Singapore Saloon shoot starts today

வீட்ல  விஷேசம் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா RK எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்தார்.

RJ Balaji Singapore Saloon shoot starts today

இந்நிலையில் 'வீட்ல விஷேசம்' படத்தினை அடுத்து ஆர். ஜே.  பாலாஜி, பிரபல இயக்குனர் கோகுல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் கோகுல், ஏற்கனவே ஜூங்கா, "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா", காஸ்மோரா, போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். இந்த புதிய படத்திற்கு "சிங்கப்பூர் சலூன்" என பெயரிடப்பட்டுள்ளது என‌ நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் பாலாஜிக்கு ஜோடியாக நடிகை ஷிவானி ராஜசேகர் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | சிம்பு நடிக்கும் 'பத்து தல'.. மிரட்டலான லுக்கில் கௌதம் கார்த்திக்கின் புதிய போஸ்டர்! மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Singapore Saloon shoot starts today

People looking for online information on RJ Balaji, Singapore Saloon Movie, Singapore Saloon shoot Movie Updates will find this news story useful.