www.garudabazaar.com

கார்த்தியின் ‘சர்தார்’.. ‘அப்போ செம்ம ஆக்‌ஷன் பிளாக் இருக்கு!’.. வந்தாச்சு ‘மாஸ்’ அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் 'சர்தார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sardar shoot update karthi action sequence trending

இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவரது இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கியது.

தொடக்கத்தில் சில நாட்கள் சென்ற இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா நெருக்கடி, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவங்கி, 4 நாட்கள் நடைபெறுவதாகவும், படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக் காட்சியை இந்த நாட்களில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

அத்துடன் சற்றே கடினமான சண்டைக் காட்சி என்பதால், பயிற்சிகளை (Rehearsal) நிறையவே எடுத்துக்கொண்டு இந்த காட்சியை படக்குழுவினர் படமாக்குகின்றனர். இந்த படத்துக்கு திலீப் சுப்புராயன் மாஸ்டர் சண்டைப்பயிற்சி அளிப்பதாக தெரிகிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மாஸ்-ஆக்‌ஷன் பேக்கேஜ் படமான ‘சுல்தான்’ படத்தை தொடர்ந்து ‘சர்தார்’ படத்திலும் செம்மயான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் என்பது இதிலிருந்து தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்திலான ‘பொன்னியின் செல்வன்’ படமும் கார்த்தியின் கைகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "ஏறு..ஏறு.. ஏறு.. வலிமை கொண்டு ஏறு!".. சூர்யாவை அடுத்து விஜய்க்காகவும் குரல் கொடுத்த சீமான்!

தொடர்புடைய இணைப்புகள்

Sardar shoot update karthi action sequence trending

People looking for online information on Karthi, Sardaar, SardarFirstlook will find this news story useful.