www.garudabazaar.com

“இப்படி ஒரு Latest Photo shoot-ஆ?”.. இனி "சதா" ரசிகர்கள் "சதா" உருகுவார்களே.. Trending!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரைப் படத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, ‘ஜெயம்’ படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். இதே படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சதா.

scintillating stills actress sadha latest photo shoot trending

இந்த படத்துக்கு பிறகு, பலருக்கும் பிடித்தமான கனவு கன்னியாகவே மாறிப் போன சதா, அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் மற்றும் பலர் நடித்த ‘அந்நியன்’ திரைப்படத்தில் சதா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் விக்ரம் அம்பி என்னும் கேரக்டராக சதாவை காதலிப்பார்.

ஆனால் சதா தன்னை ஏற்றுக்கொள்ளாததால் ரெமோ என்னும் கேரக்டராக மாறுவார். இறுதியில் அந்நியன் சதாவை கொல்ல முயற்சிக்க, ரெமோவும், அம்பியும் சேர்ந்து சதாவை காப்பாற்ற முயற்சி செய்வார்கள். இப்படி கதை கிட்டத்தட்ட பாதிக்கு பாதி, நாயகி சதா மீதுதான் பயணிக்கும்.

அதேபோல் ஜீவா இயக்கத்தில் வெளியான  ‘உன்னாலே உன்னாலே’ திரைப்படத்தில் சதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்கள் தமிழ் திரைப்படங்களில் தோன்றாமல் இருந்த சதா, பின்னர் ‘டார்ச் லைட்’ என்னும் பெண்களை மையப்படுத்திய கதையில் நடித்து இருந்தார். அதன் பின்னும் சதாவை காணாமல் இருந்த ரசிகர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு ட்ரீட்டாக ஒரு முக்கியமான போட்டோ ஷூட் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சிகப்பு வண்ண ஆடையில் சதா கொடுத்திருக்கும் இந்த போஸ்களும் போட்டோ ஷூட்டும் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ‘சதா.. ஜெயம் படத்தில் அப்போது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறாரே’ என்று உருகத் தொடங்கி விட்டனர்.

ALSO READ: APP மூலம் ஆபாச படமா?.. ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடி கைது! புகார் கொடுத்த நடிகை இவரா?

Tags : Sadha, Trending

தொடர்புடைய இணைப்புகள்

scintillating stills actress sadha latest photo shoot trending

People looking for online information on Sadha, Trending will find this news story useful.