www.garudabazaar.com

'அவர்' மேல உங்களுக்கு இவ்ளோ வெறுப்பு ஏன்?... ரியோவை 'கேள்வி' கேட்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிதா-சுரேஷ் சண்டை கூட முடிவுக்கு வந்துவிட்டது. அனால் ரியோ-சுரேஷ் இடையிலான பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை. பேஷன் ஷோவில் தொடங்கிய, குரூப்பிஸம் தாண்டி தற்போது கேப்டன் டாஸ்க்கில் இந்த பஞ்சாயத்து வந்து நிற்கிறது.

Rio objected Suresh Chakravarthy Name, Fans shocked

சுரேஷ், ரியோவுடன் அமர்ந்து பேசியதற்கு பின் அந்த விஷயத்தை அதோடு விட்டுவிட்டார். ஆனால் ரியோ அப்படி விடவில்லை போல. நேற்று டாஸ்க்கிற்கு முன் இந்த வீட்டில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் நபரை தேர்வு செய்யுங்கள் என பிக்பாஸ் கூற கேப்ரியலா, சுரேஷ் பேரை முன்மொழிந்தார். இதைப்பார்த்த ரியோ அதற்கு ஒரு லெக்சர் கொடுத்து சுரேஷை கழட்டி விட்டார்.

தொடர்ந்து மிகவும் அமைதியாக இருந்த நபரை தேர்வு செய்யுமாறு பிக்பாஸ் கூற அப்போதும் ரியோ சுரேஷ் பேரை சொல்ல விடாமல் அதற்கு ஒரு விளக்கம் அளித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ஏன் இந்த வேலை? நாளாக,நாளாக சுரேஷ் மேல உங்களோட காண்டு அதிகமாகிட்டே போகுது ஏன்? என்று கேள்வி கேட்டு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Rio objected Suresh Chakravarthy Name, Fans shocked

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.