www.garudabazaar.com

ரொம்ப புடிச்சிருக்கு 'சப்போர்ட்' செய்த கவின்... யாருக்குன்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று காலை வெளியான பிக்பாஸ் ப்ரோமோவை பார்த்தவர்கள் இந்த மனுஷன் என்னப்பா இப்படி ஸ்கோர் பண்ணுறாரு? என சுரேஷ் சக்கரவர்த்தியை நினைத்து வியந்து போயினர். டாஸ்க் ஒன்றில் கேப்ரியலாவை சுமந்து கொண்டு அவர் நின்ற புகைப்படம் தான் சமூக வலைதளங்களின் இன்றைய ஹாட் டாபிக்.

Kavin appreciates Suresh Chakravarthy Sportsmanship

பிக்பாஸ் ஆரம்பித்த தினத்தில் இருந்து இதுநாள் வரை அதிகமாக ப்ரோமோவில் இடம்பிடித்த பெருமை சுரேஷ்க்கு உண்டு. என்றாலும் தற்போது அவருக்கு ஆர்மி ஆரம்பித்து, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் அளவிற்கு ரசிகர்கள் உருவாகி விட்டனர். குறிப்பாக இன்றைய டாஸ்க்கில் கேபியை அவர் சுமந்து நின்றது பாரபட்சம் பாராமல் அவருக்கு ரசிகர்களை வாரிவழங்கி இருக்கிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீஸனின் 3-வது போட்டியாளரும், நடிகருமான கவின் தன்னுடைய ஆதரவை சுரேஷ் சக்கரவர்த்திக்கு அளித்திருக்கிறார். சுரேஷ்-கேபி புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஹார்ட் சிம்பல் அளித்து இருக்கிறார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் இனிமே எங்களோட சப்போர்ட் அவருக்குத்தான் என தம்ப்ஸ் அப் காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Kavin appreciates Suresh Chakravarthy Sportsmanship

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.