''என்னைப் பொறுத்தவரை கவின் தான் வின்னர்'' - பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 27, 2019 05:35 PM
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் பிக்பாஸ் அறிவித்த 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுவதாக அறிவித்தார். சாண்டியும், லாஸ்லியாவும் எவ்ளோ தடுத்தும் அவர் வெளியே செல்லும் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து சாண்டியும், லாஸ்லியாவும் அடுத்த நாள் முழுவதும் சோகமாகவே இருந்தனர். ஷெரினும் முகேனும் எவ்ளோ சமாதானப்படுத்தி பார்த்தனர். பின்னர் தங்களை மாற்றிக்கொண்டு இயல்பாக டாஸ்க்குகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பிரபல நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான ரேஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் கவின் எடுத்த முடிவை முழுமையாக ஆதரிக்கிறேன். அவன் மற்றவர்கள் செய்ய முடியாததை செய்திருக்கிறார். அல்லது அதனை செய்ய அவரிடம் தைரியம் இருக்கிறது. இது தியாகம் அல்லது விட்டுக்கொடுத்தலாக இருக்கலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை கவின் தான் வின்னர்'''' என தெரிவித்துள்ளார்.
''என்னைப் பொறுத்தவரை கவின் தான் வின்னர்'' - பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் அதிரடி வீடியோ