‘பொளக்குறோம்..!’ - கவினுக்கு வெளிய போய் கச்சேரி இருக்கு.. ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 27, 2019 11:53 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 96 நாட்களை எட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் சேரன் வெளியேறியதைத் தொடர்ந்து எவிக்ஷன் இல்லாமலே, ரூ.5 லட்சத்துடன் கவின் போட்டியில் இருந்து விலகினார். கவினின் இந்த அதிரடி முடிவினால் லாஸ்லியா மனமுடைந்திருக்கிறார்.
இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோவில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவினை நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த லாஸ்லியாவுக்கு, தர்ஷன் ஆறுதல் கூறியது, அவருக்குள் இருக்கும் பாசக்கார அண்ணன் குணத்தை காட்டியது.
இதனை தொடர்ந்து, வெளியான இரண்டாவது புரொமோ வீடியோவில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியார்கள் கவின் வெளியேறியதை பற்றி பேசி உள்ளார்.
அதில் சாண்டி உன்னை நிறைய கேள்வி கேட்க வேண்டி உள்ளது என்றும், அதனை தொடர்ந்து முகென் பொளக்குறோம் என்றும் கூறினார்கள்.
‘பொளக்குறோம்..!’ - கவினுக்கு வெளிய போய் கச்சேரி இருக்கு.. ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ