மக்கள் செல்வனின் ‘சங்கத்தமிழன்’ சென்சார் ரிப்போர்ட் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 27, 2019 04:53 PM
விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பாக பி.பாரதி ரெட்டி தயாரித்து, விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் 'சங்கத்தமிழன்'. இந்த படத்தை 'வாலு, 'ஸ்கெட்ச்' படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் இயக்கிவருகிறார்.

விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் டீஸரும், கமலா என்கிற பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், சங்கத் தமிழன் தீபாவளி கொண்டாட்டம் என்று குறிப்பிட்டிருந்தது. இப்படம் அக்டோபர் 4 தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு "யு" சான்றிதழ் வழங்கியுள்ளது.