''கவின் வெளியே போனது உண்மையாவே கஷ்டமா இருக்கு'' - முன்னாள் பிக்பாஸ் பிரபலம் ஃபீலிங்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 27, 2019 04:34 PM
இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல், நட்பு என எப்பொழுதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர் கவின். இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் கடுமையாக நடைபெற்றுவந்தன.

தொடர்ந்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷனுக்கா நாமினேட் செய்யப்பட்டு வந்தாலும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக ஓட்டுப் போட்டு நிகழ்ச்சியில் தொடர்வதற்கு காரணமாக இருந்தனர்.
இதனையடுத்து பிக்பாஸில் நேற்றைய நிகழ்ச்சியில் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு விருப்பமுள்ளவர்கள் வெளியேறலாம் என்று பிக்பாஸ் அறிவித்தார். இதனையடுத்து கவின் பிக்பாஸின் நிபந்தனையை ஏற்று வெளியேறினார்.
இவர் குறித்து பிரபல நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஐஸ்வர்யா தத்தா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், ''கவின் வெளியே போனது உண்மையிலேயே கஷ்டமா இருக்கு. கடவுள் அவருக்கு எல்லா வலிமையையும், சக்தியையும் அளிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Really felt sad for kavin exit....may god give him all the strength and power....@Actor_kaviin
— Aishwarya dutta (@Aishwaryadutta6) September 26, 2019