“உனக்கு என்ன தோணுதோ அத செய்” - கவினின் பிரிவால் வாடும் லாஸ்லியாவுக்கு கிடைத்த ஆறுதல்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 27, 2019 10:22 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 96 நாட்களை எட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
![Vijay TV Kavin Lolsiya Tharshan Bigg Boss Tamil 3 Promo 1 Vijay TV Kavin Lolsiya Tharshan Bigg Boss Tamil 3 Promo 1](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijay-tv-kavin-lolsiya-tharshan-bigg-boss-tamil-3-promo-1-photos-pictures-stills.jpg)
பிக் பாஸ் வீட்டில் சேரன் வெளியேறியதைத் தொடர்ந்து எவிக்ஷன் இல்லாமலே, ரூ.5 லட்சத்துடன் கவின் போட்டியில் இருந்து விலகினார். கவினின் இந்த அதிரடி முடிவினால் லாஸ்லியா மனமுடைந்திருக்கிறார்.
இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோவில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவினை நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த லாஸ்லியாவுக்கு, தர்ஷன் ஆறுதல் கூறியது, அவருக்குள் இருக்கும் பாசக்கார அண்ணன் குணத்தை காட்டியது.
புரொமோ வீடியோவில், ‘முடிந்ததை எண்ணி வருத்தப்படாமல் போட்டியில் கவனம் செலுத்து. கவினுக்காகவும், அப்பா-அம்மாவுக்காகவும் விளையாடு. இன்னும் 10 நாட்கள் தான்.. அதற்கு பின் உனக்கு தோன்றியதை செய்’ என ஆறுதல் கூறினார்.
கவின் இல்லாத பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா, அவரது நினைவால் வாடுவாரா அல்லது அவருக்காகவும், லாஸ்லியாவின் தந்தைக்காகவும் போட்டியில் கவனம் செலுத்து இறுதிப்போட்டிக்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
“உனக்கு என்ன தோணுதோ அத செய்” - கவினின் பிரிவால் வாடும் லாஸ்லியாவுக்கு கிடைத்த ஆறுதல்! வீடியோ