‘சினம்’ டீமுடன் பர்த்டே கொண்டாடிய அருண் விஜய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மகிழ்திருமேனியின் ‘தடம்’ திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘சினம்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.

Arun Vijay celebrates his birthday at the sets of Sinam with his family and crew

மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் ‘சினம்’ திரைப்படத்தை ‘ஹரிதாஸ்’ படத்தின் இயக்குநர் GNR குமாரவேலன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.

இப்படத்தில் பாரி வெங்கட் என்ற கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்து வருகிறார். மூவி ஸ்லைட்ஸ் நிறுவனத்தின் பேனரில் ஆர்.விஜயகுமார் தயாரித்து வரும் இப்படத்தில் பல்லக் லால்வானி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘சினம்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் நேற்று (நவ.20) நிறைவடைந்ததை தொடர்ந்து. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

கடந்த நவ.19ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய், தனது குடும்பத்தினர் மற்றும் ‘சினம்’ திரைப்படத்தின் படக்குழுவுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தவிர, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் அருண் விஜய் முடித்துள்ளார். ‘பாக்ஸர்’, நவீனின் ‘அக்னி சிறகுகள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.