www.garudabazaar.com
iTechUS

மாறுபட்ட தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் & நானி.. இணையத்தில் வைரலாகும் வேறமாரி 'தசரா' BTS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி நடிக்கும் தசரா படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷின் BTS புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Keerthy Suresh shared her new look BTS from Dasara

Also Read | "என்னது, விக்ரமன் பொய் சொன்னாரா?".. பழைய சம்பவத்தை தோண்டி எடுத்த போட்டியாளர்!!

நேச்சுரல் ஸ்டார் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமாக  'தசரா' அமைந்துள்ளது.

நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் பாடல் தூம் தாம் வரை நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

Keerthy Suresh shared her new look BTS from Dasara

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக நடிக்கிறார். வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

Keerthy Suresh shared her new look BTS from Dasara

தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சில படங்கள் தான் நம் வீட்டு கதவை தட்டி - "ஏய், நான் உன் கிரீடத்தில் இறகாக அலங்கரிப்பேன் என சொல்லும்". அப்படி ஒரு படம் தான் எனக்கு தசரா". என கீர்த்தி சுரேஷ் ட்வீட் செய்துள்ளார்.

Keerthy Suresh shared her new look BTS from Dasara

மேலும் நானியுடன் தான் இருக்கும் தசரா படத்தின் தோற்ற புகைப்படங்களையும், இயல்பான தோற்ற புகைப்படங்களையும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

Also Read | Thalapathy 67: "இன்னும் இத்தனை நாள்ல தளபதி 67 அப்டேட்".. லோகேஷ் கனகராஜ் ரெடி!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh shared her new look BTS from Dasara

People looking for online information on Dasara, Keerthy Suresh, Nani will find this news story useful.