''இது Pure Drama'' - கவின் விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 26, 2019 04:35 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டவர் கவின். நட்பு, காதல், சண்டைகள் என அவரை சுற்றியே எல்லாம் நடைபெற்றன.

தற்போது இறுதிக்கட்டத்தை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பிக்பாஸ் ரூ.5 லட்சத்தை குறிப்பிட்டு அதனை எடுத்துக்கொண்டு போட்டியாளர்கள் இப்பொழுதே வெளியேறலாம் என்று அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து கவின் வெளியேறுவிதமாக விஜய் டிவி புரோமோ வெளியிட்டது. அதில் கவினை வெளியே போக வேண்டாம் என்று லாஸ்லியா கதறி அழுகிறார். ஆனால் அவரை சமாதானப்படுத்திய கவின் வெளியே செல்கிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் பிக்பாஸில் கவின் லாஸ்லியா விவகாரம் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், ''சேரன் மற்றும் வனிதாவால் மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயம் தான் கவின் மற்றும் லாஸ்லியா லவ். ஒரு கட்டத்துக்கு மேல கவினுக்கு தெளிவா தெரிஞ்சிடுச்சு காதல் விவகாரங்கள் தான் தெளிவா பேசப்படுது. அதனால அதையே தொடர்ந்து பண்ணுவோமே என்று பண்ண ஆரம்பிச்சுட்டான்.
அதே மாதிரி லாஸ்லியாவுக்காக சாண்டியிடம் சண்டை போட்டதும் அப்படித்தான். கண்டன்டே இல்லைனு டிராமா பண்ண ஆரம்பிச்சுட்டான். Pure Drama. உண்மைய சொல்லணும்னா கவின்லா அவ்ளோ ரியாக்ட் பன்ற ஆளே கிடையாது. தேவையில்லாம ஒரு சீனு. அவன் ஒரு நடிகன் தான். எல்லாத்தையும் கரெக்டா டிரை பண்ணான். ஆனா ஒட்டல'' என்றார்.
''இது PURE DRAMA'' - கவின் விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் வீடியோ