தமன்னா - யோகி பாபுவின் ஹாரர் காமெடி படமான பெட்ரோமாக்ஸ் சென்சார் விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 26, 2019 04:30 PM
ஈகிள் ஐ புரொடக்ஷன் தயாரிப்பில் தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து உருவாகியிருக்கும் படம் 'பெட்ரோமாக்ஸ்'. 'அதே கண்கள்' இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இந்த படத்தை இயக்கியுள்ளார்

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, டான் மேக்கர்த்தூர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
இந்த படம் தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு டாப்ஸி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அனந்தோ பிரம்மா' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படம் அக்டோபர் 11 தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.