கவீன், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் 'நட்புனா என்னனு தெரியுமா ?'. இந்த படத்தை சிவா அரவிந்த் இயக்க , லிப்ரா புரொடக்ஷன் சார்பாக ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு தரண் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்துள்ளாரர். இந்த படத்தை நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் ரவிந்திர் சந்திரசேகர், ''இந்த படம் ரிலீஸிற்கு முதல் நாள் என்ன நடந்தது என்பது என் குழுவிற்கு மட்டும் தான் தெரியும். இந்த படம் பண்ணிடவே முடியாது என்று சொன்ன சேலஞ்சஸ் ஜாஸ்தி.
ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆய்டும்னு நம்புன ஒரே ஆள் என் அம்மா. இந்த படம் பண்ணும் போது எவ்ளோ கஷ்டப்பட்டேனு யாருக்காவது தெரியுமா ? என்னை நம்புனவங்களுக்காக இந்த படத்தை ஒழுங்கா கொண்டு போய் சேர்க்கனும்னுகிற எண்ணம் மட்டும் தான் எனக்கு இருந்தது.
என்ன ஒருத்தன் கேட்டான் . நீ என்ன முட்டாளா இப்படி புரோமோட் பண்ணிட்டு இருக்கனு. இப்படி புரோமோட் பண்ணதுனால தான் இது மூனு வருஷ படம்னு யாருக்குமே தெரியல. படம் பன்ற எனக்கு தெரியாதா ? புரோமோஷன் போட்ற ஒரு பைசா திரும்பி வராதுனு. லாஸ் ஆகும்னு தெரிஞ்சு இந்த படத்த பண்ணதுக்கு காரணம் இது செத்திருக்க கூடாதுனு தான்.
இயக்குநருக்கு ஒரு கட்டத்துல என் மேல இருக்க நம்பிக்கை போயிருச்சு. புதுமுகங்கள வச்சு ஒரு படத்தை வெளியிடும் போது கண்டன்ட் சரியில்லன அந்த படம் தோற்கும். தோல்விய ஏத்துக்கிறதுல தப்பே இல்ல சார். புரோடிஷரா நான் ஜெய்ச்சுட்டேன் என் வேலை படத்தை தியேட்டருக்கு கொண்டு வரதுதான்'' என்றார்.
''எனக்கு இந்த படம் லாஸ்னு தெரியும்'' - தயாரிப்பாளர் வேதனை வீடியோ